ஆப்நகரம்

சசிகலாவுக்கு எத்தனை எம்எல்ஏ-க்கள் ஆதரவு?

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எத்தனை எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 8 Feb 2017, 2:14 pm
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எத்தனை எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil how many mlas support sasikala
சசிகலாவுக்கு எத்தனை எம்எல்ஏ-க்கள் ஆதரவு?


சசிகலா மீதான அதிருப்தியை முதல்வர் பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியது. தொடர்ந்து, அவரது பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. என்னை யாரும் நீக்க முடியாது என்ற முதல்வரின் பதிலடி. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என பன்னீர்செல்வம் கூறியது என தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இத்தகைய பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில், 131 எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டுள்ளனர் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

ஆனால், 110க்கும் குறைவான எம்.எல்.ஏக்கள்தான் பங்கேற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் 93 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும், எம்.எல்.ஏ-க்கள் 41 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதேபோல், மொத்தம் 131பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், 129 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மை நிலவரங்கள் இரு தரப்பிலும் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
How many MLA's support Sasikala?

அடுத்த செய்தி