ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தேவைப்படும்? -தொடங்கியது கணக்கெடுப்பு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இன்னும் ஆறு மாதத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் தேவைப்படும் என்பது குறித்த கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

Samayam Tamil 5 Oct 2020, 5:31 pm
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவேக்சின், ஜைகோவ்- டி, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு ஆகிய மூன்று தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த மருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளது.
Samayam Tamil vaccine survey


இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சமூக ஊடகங்களில் தம்மை பின் தொடர்பவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர், "இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருத்து பயன்பாட்டுக்கு வந்து விடும்.

25 கோடி பேருக்கு 40 முதல் 50 கோடி டோஸ் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகள் இந்த மாத இறுதிக்குள் இதற்கான முன்னுரிமை பட்டியலை தயாரித்து வழங்க உத்தரவிடப்படும். அதற்கான வடிவமைப்பை மத்திய அரசு தயாரித்து வருகிறது" என்று கூறினார்.

விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை: டிஸ்சார்ஜ் பற்றி வெளியான மருத்துவ அறிக்கை!

இதனிடையே, தமிழகத்துக்கு தேவைப்படும் தடுப்பூசிகள் எவ்வளவு? கொரோனா வைரசுக்கு எதிராக களப்பணியாற்றும் மருத்துவர்கள், காதார பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? உடனடியாக தேவைப்படும் தடுப்பூசி எவ்வளவு? என்பன குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கும்படி ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் மாவட்ட வாரியாக தேவைப்படும் கொரோனா தடுப்பூசி எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் முதல்கட்டமாகவும், மொத்தமாகவும் தேவைப்படும் தடுப்பூசி எவ்வளவு என்பது குறித்து தனித்தனியாக கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி