ஆப்நகரம்

வாடகை பாக்கியால் ஏழு ஏடிஎம் மையங்களுக்கு சீல் வைப்பு

ரயில்வே நிர்வாகத்திற்கு முறையாக வாடகை வழங்காததால் சென்னை ரயில் நிலையங்களில் உள்ள ஏழு ஏடிஎம்கள்க்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

TNN 29 Nov 2016, 9:36 pm
ரயில்வே நிர்வாகத்திற்கு முறையாக வாடகை வழங்காததால் சென்னை ரயில் நிலையங்களில் உள்ள ஏழு ஏடிஎம் மையங்களுக்குஅதிகாரிகள் சீல் வைத்தனர்.
Samayam Tamil i 7 atm centres sealed for rent balance chenna railway station
வாடகை பாக்கியால் ஏழு ஏடிஎம் மையங்களுக்கு சீல் வைப்பு


சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், மாம்பலம், வில்லிவாக்கம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம்கள் மையங்கள் செயல்பட்டு வந்தனர். இந்த ஏடிஎம்-களின் ஒப்பந்தம் கடந்த 2012-ல் முடிவடைந்தது.

மேலும் வங்கி நிர்வாகம் ஏடிஎம்களின் ஓப்பந்தத்தை புதுபிக்கவும் இல்லை, முறையாக வாடகை பாக்கியையும் செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து இந்த ரயில் நிலையங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு ரயில்வே துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ரூபாய் நோட்டு வாபஸால் மக்கள் அவதிப்படும் சூழ்நிலையில் , மக்கள் அதிகம் நம்பி இருப்பது ஏடிஎம் மையங்களை தான் . இந்த நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்து ஏழு ஏடிஎம் களுக்கு இக்கட்டான இந்த சூழ்நிலையில் சீல் வைத்தது தொடர்பாக மக்கள் அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி