ஆப்நகரம்

அவருக்கு அதிகாரமில்லை: மு.க.ஸ்டாலினை புகழ்ந்த அரசகுமார் காட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வராகும் காலம் கனியும் என திருமண விழாவில் பேசிய பி.டி.அரசகுமார் புகழாரம் சூடியிருந்தார்

Samayam Tamil 2 Dec 2019, 5:27 pm
சென்னை: என்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது எனக்கூற மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை என பி.டி.அரசகுமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்


புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் இல்லத்திருமண விழா நேற்று நடைபெற்றது. அதில், திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேசிய பி.டி.அரசகுமார்,”எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின் தான். இயக்கத்திற்காக நன்றி கடன் பட்டவன். ஜனநாயக வழியில் முதல்வர் ஆக வேண்டும் என்பதையே ஸ்டாலின் விரும்புவார். அதற்காக அவர் காத்திருக்கிறார். விரைவில் காலம் கனியும். காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைவோம். நான் ஏற்கனவே திமுக கரை வேட்டி கட்டியவன், எப்பொழுது வேண்டுமானாலும் கட்டிக் கொள்வேன். யாரும் கொடுத்த கட்ட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அதிமுக அரசின் முகத்தில் கரியைப் பூச மக்கள் தயார்: மு.க.ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து, அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியத் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய தலைமையிடம் இருந்து பதில் வரும் வரைகட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் அரசகுமார் கலந்துகொள்ளக்கூடாது என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராம்; என்ன ஆச்சு பாஜகவிற்கு!

இந்நிலையில், என்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது எனக்கூற மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை என பி.டி.அரசகுமார் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் முதல்வராவார் என நான் பேசியது பற்றி ஏற்கனவே தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் மாநில பொறுப்பு தலைவரிடம் விளக்கம் அளித்து விட்டதாகவும் அரசகுமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி