ஆப்நகரம்

AIADMK: சின்னம்மா இல்லை, இனி நான் எடப்பாடி ஆளு! - கருணாஸ் அதிரடி முடிவு

கடந்தாண்டு முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், தற்போது அதிமுக.,வுக்கு தான் தனது ஆதரவு என அந்தர் பல்டி அடித்துள்ளார்.

Samayam Tamil 12 Feb 2019, 8:32 pm
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவை சபாநயாகர் தனபால் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார் என அவரை நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளருக்கு கடிதம் எழுதி பரப்பை ஏற்படுத்தினார்.
Samayam Tamil karunas-1


அதோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார்.


என் தொகுதிக்கு ஒன்னுமில்லையா?
தற்போது பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைப்பெற்று வருகின்றது. அப்போது பேசிய கருணாஸ் ராமநாதபுரத்தில் அப்துல் கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்த அரசுக்கு நன்றி என கூறினார்.

அதற்கு அமைச்சர் மணிகண்டன், “கல்லூரி அமைய உள்ளது கருணாஸின் தொகுதி இல்லை. என்னுடைய தொகுதி.” என கூறினார்.
அதற்கு கருணாஸ், “என்னுடைய தொகுதிக்கு அரசு எதுவும் செய்யவில்லை என ஒப்புக்கொண்ட அமைச்சருக்கு நன்றி” என கூறிய காரசார விவாதம் நடந்தது.


அதிமுக.,வுக்கு ஆதரவு :
இந்நிலையில் அதிமுகவுக்கு தான் எனது ஆதரவு என கருணாஸ் தெரிவித்துள்ளார். அம்மாவின் ஆதரவோடு, திருவாடணை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றேன்.

இதனால் தற்போதுள்ள அதிமுக அரசு 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய தான் ஆதரவாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி