ஆப்நகரம்

நான் கலைஞரின் மகன்; சொன்னதை செய்வேன்: அழகிரி அதிரடி

நான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன் என்றும் வரும் 5ம் தேதி நடைபெற்ம் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் வரை திரளுவார்கள் என மு.க. அழகிரி தெரிவித்தார்.

Samayam Tamil 2 Sep 2018, 2:26 pm
நான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன் என்றும் வரும் 5ம் தேதி நடைபெற்ம் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் வரை திரளுவார்கள் என மு.க. அழகிரி தெரிவித்தார்.
Samayam Tamil alagiri-mk
சென்னை அமைதிப் பேரணி பற்றி கருத்து தெரிவித்த அழகிரி


மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகரி வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். சென்னையில் சேப்பாகம் விருந்தினர் மாளிகை முதல் கருணாநிதியின் சமாதி வரை இந்த பேரணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு லட்சம் வரை ஆட்களை திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்கு வேண்டி அவர், தினமும் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக-வில் இணைவதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க.வில் எங்களை இணைக்க தயார் என்றால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என அழகிரி தெரிவித்திருந்தார்.

சென்னையில் வரும் செப்டம்பர் 5ம் தேதி மு.க. அமைதிப் பேரணி நடத்தப்படும் என அழகிரி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன்” என பதில் அளித்தார்.

அதை தொடர்ந்து ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் எனக் கூறியும் திமுக-விலிருந்து அழைப்பு வரவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த மு.க. அழகிரி கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.

அடுத்த செய்தி