ஆப்நகரம்

இதற்கு நான் ஆசையெல்லாம் படவில்லை- அமைச்சர் தங்கமணி

வேலூர் பிரச்சாரத்தில் பேசிய தங்கமணி, வேலூர் அதிமுக வெற்றிக் கோட்டையாக மாறும். நான் துணை முதல்வராக ஆசைப்படுவதாக பொய் செய்திகளை சிலர் வெளியிடுகின்றனர். எந்த பதவிக்கும் ஆசைப்படுவன் நான் இல்லை.

Samayam Tamil 30 Jul 2019, 9:42 pm
வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஐந்தாம் தேதி நடக்கிறது. பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தேர்தலில் அதிமுக சார்பில் ஏ சி சண்முகம் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள்.
Samayam Tamil AIADMKMinisterThangamani750


அதிமுக வேட்பாளர்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.திமுகவுக்காக மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்தார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் இருமுறை மட்டுமே அதிமுக ஜெயித்து இருக்கிறது. அதில் 1984ல் ஜெயித்தது இப்போதைய அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தான்.தொகுதி தொடர்பான சில செய்திகள் இந்த வீடியோவில்.

Triple Talaq: மக்களவையில் ’எஸ்’ - மாநிலங்களவையில் ‘நோ’; முத்தலாக் மசோதாவில் முட்டிகிட்டு நிற்கும் அதிமுக!

துணை முதல்வராக வர ஆசைப்படவில்லை என்றும் சிலர் பொய் தகவலை வெளியிடுகின்றனர் என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

வேலூர் பிரச்சாரத்தில் பேசிய தங்கமணி, வேலூர் அதிமுக வெற்றிக் கோட்டையாக மாறும். நான் துணை முதல்வராக ஆசைப்படுவதாக பொய் செய்திகளை சிலர் வெளியிடுகின்றனர். எந்த பதவிக்கும் ஆசைப்படுவன் நான் இல்லை. ஆட்சியை காப்பாற்றுவது தான் எங்கள் பணி. அதிமுகவை பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்படும் என்று கூறினார்.

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்ததும் இஸ்லாமியர்களை ஒடுக்கத் துவங்கிவிட்டதா பாஜக?

தமிழகத்தில் பல இடங்களில் பணம் கொடுத்த புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15 நாட்களுக்கு முன்னர் பணம் கைப்பற்றப்பட்டதற்கு இப்போது தேர்தலை ரத்து செய்திருப்பது தேவையில்லாத ஒன்று என்று பொதுமக்கள் முன்னதாக வேலூர் தேர்தல் ரத்து குறித்து தங்களது கருத்தை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரத்த செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலை உடனடியாக மறு தேதி அறிவித்து நடத்த வேண்டும். வேலூருக்கு எம்.பி. வேண்டும். இவ்வளவு நாட்கள் நடந்த மக்கள் உழைப்பிற்கு பரிகாரம் வேண்டும் என முன்னாள் வேலூர் எம்.எல்.ஏ பரந்தாமன் முன்னதாகத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி