ஆப்நகரம்

எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயா்வை நான் பெறப்போவதில்லை – தினகரன் தகவல்

மக்கள் அவதிப்படும் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினா்களுக்கு உயா்த்தப்பட்டுள்ள ஊதிய உயா்வை நான் பெறப்போவதில்லை என்று ஆா்.கே. நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 21 Jan 2018, 5:38 pm
மக்கள் அவதிப்படும் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினா்களுக்கு உயா்த்தப்பட்டுள்ள ஊதிய உயா்வை நான் பெறப்போவதில்லை என்று ஆா்.கே. நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil i dont need mlas salary hike said ttv dinakaran
எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயா்வை நான் பெறப்போவதில்லை – தினகரன் தகவல்

எாிபொருள் விலையேற்றம், அரசின் நிதி நெறுக்கடியை காரணம் காட்டி தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயா்த்தியுள்ளது. காரணங்கள் கூறப்பட்டிருந்தாலும் ஒரே நேரத்தில் 66 சதவீதம் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இந்த கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தொிவித்து வருகின்றனா். இந்நிலையில் ஆா்.கே.நகா் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில் அரசின் நிதி நெருக்கடியை காரணம் காட்டி பொதுமக்கள் தலையில் அரசு அனைத்து பாரங்களையும் சுமத்துவது கண்டிக்கத்தக்கது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நிதி நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அவற்றை சாி செய்ய அரசு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து மக்களின் தலையில் சுமையை ஏற்றுவது ஏற்புடையதல்ல.

மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினா்களின் ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அது எனக்கு தேவையில்லை. அதனை நான் பெறப்போவதும் இல்லை என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி