ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது: அஞ்சலி சர்மா !

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வக்கீல் அஞ்சலி சர்மா தெரிவித்துள்ளார்.

TOI Contributor 28 Jan 2017, 5:54 am
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வக்கீல் அஞ்சலி சர்மா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i have only filed an interim application in the r anjali sharma
ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது: அஞ்சலி சர்மா !


ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது . பின் இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞரான அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்,

அஞ்சலி தாக்கல் செய்த மனு அனுமதி பெறாமல் தாக்கல் செய்தது என தெரியவந்தது. உடனடியாக வாபஸ் பெறக்கோரி விலங்குகள் நல வாரிய செயலாளர் ரவிக்குமார் அஞ்சலிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், அஞ்சலி சர்மா கூறுகையில், தமிழக அரசின் அவசரச்சட்டத்தை எதிர்த்து நான் மனு தாக்கல் செய்யவில்லை, 2016ல் தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால மனுதான். இதை வாரியத்தின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யவில்லை, வாரிய செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக என்னை தடுக்காது. இருப்பினும் அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என அஞ்சலி சர்மா, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

I have only filed an interim application in the existing petition No. 23 of 2016 which the AWBI had filed in January, 2016 -says animal welfare Board Member Anjali Sharma.

அடுத்த செய்தி