ஆப்நகரம்

தமிழ் தெரியும், ஆனால் பேச மாட்டேன்: வெங்கய்யா

அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு விழாவில் பேசிய பாஜக துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு தமிழ் தெரியும் ஆனால் பேச மாட்டேன் என்று கூறினார்.

TNN 27 Jul 2017, 4:42 pm
அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு விழாவில் பேசிய பாஜக துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு தமிழ் தெரியும் ஆனால் பேச மாட்டேன் என்று கூறினார்.
Samayam Tamil i know tamil but wont speak says venkaiah naidu
தமிழ் தெரியும், ஆனால் பேச மாட்டேன்: வெங்கய்யா


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் சக்தியாகத் திகழ்ந்தவர். விஞ்ஞானியாகவும் இஸ்ரோவில் பணியாற்றியவர். எந்த பேதமும் இல்லாமல் அனைவராலும் நேசிக்கப்பட்ட மகத்தான தலைவராகத் திகழ்ந்த அவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி காலமானார்.

இவரது நினைவைப் போற்றும் விதமாக ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான பேய்க்கரும்பு என்னும் இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கலாமின் மணி மண்டபத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய பாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருமான வெங்கய்யா நாயுடு தனது உரையின் முடிவில் பழம்பெருமை மிக்க தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்கு வருந்துவதாகத் தெரிவித்தார். ஆனால், உரையில் கடைசி வரியாக “தமிழ் தெரியும். ஆனால் பேச முடியாது.” என்று கூறினார்.

அடுத்த செய்தி