ஆப்நகரம்

மரியாதை நிமித்தமாக விஜயகாந்தை சந்தித்தேன்: திருநாவுக்கரசர்

மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தேன் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

TNN 16 Oct 2016, 2:25 pm
சென்னை: மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தேன் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i met vijayakanth as a courtesy thirunavukarasar
மரியாதை நிமித்தமாக விஜயகாந்தை சந்தித்தேன்: திருநாவுக்கரசர்


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க்கப்பட்டத்தையடுத்து, பல்வேறு கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அதேபோல், தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்து பேசினேன் என்றார்.

மேலும், நண்பர் என்கிற முறையிலே பொதுவான விஷயங்கள் குறித்து பேசியதாகவும், பொதுவான அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்ட திருநாவுக்கரசர், தேமுதிக சார்பில் தனித்து போட்டி என அறிவித்துள்ளார்கள். அதேபோல், காங்கிரசை பொறுத்தவரை திமுக-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளோம், அதற்கான பணிகள் நடைபெற்ற போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானதும், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்றார்.
I met vijayakanth as a courtesy: Thirunavukarasar

அடுத்த செய்தி