ஆப்நகரம்

நளினி, காா்த்தி சிதம்பரம் மீது வருமான வரித்துறையினா் வழக்குப்பதிவு

வெளிநாட்டில் உள்ள சொத்துகளை மறைத்ததாக நளினி சிதம்பரம் மற்றும் காா்த்தி சிதம்பரம் மீது வருமான வாித்துறையினா் வழக்கப் பதிவு செய்துள்ளனா்.

Samayam Tamil 11 May 2018, 5:42 pm
வெளிநாட்டில் உள்ள சொத்துகளை மறைத்ததாக நளினி சிதம்பரம் மற்றும் காா்த்தி சிதம்பரம் மீது வருமான வாித்துறையினா் வழக்கப் பதிவு செய்துள்ளனா்.
Samayam Tamil Karti Nalini Chidambaram.


இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியது தொடா்பாகவும், அமெரிக்காவில் உள்ள இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடா்பாகவும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், அவரது மகன் காா்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சிதம்பரம் ஆகியோருக்கு வருமான வாித்துறை 2 முறை நோட்டீஸ் அனுப்பியது.

இதனை ரத்து செய்யக் கோாியும், கறுப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்கக் கோாியும் நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரா்களின் கோாிக்கையை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து கறுப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், காா்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சிதம்பரம் மீது வருமான வாித்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அடுத்த செய்தி