ஆப்நகரம்

பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய பிரார்த்திக்கும் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 11 Aug 2020, 9:06 pm
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய நிலையில் கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை... மருத்துவமனை அதிர்ச்சி தகவல்


இந்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பலரும் பிரணாப் முகர்ஜி விரைவில் நலம்பெற வேண்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம்நாத் கோவிந்த், மருத்துவமனைக்கு நேரில் சென்று, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி