ஆப்நகரம்

நான் நினைத்திருந்தால் 2001ல் சிஎம் ஆகியிருப்பேன்; கோவை விழாவில் டிடிவியால் பரபரப்பு!

தனது அரசியல் பயணம் குறித்து, விழா ஒன்றில் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

Samayam Tamil 9 Jul 2018, 4:22 am
கோவை: தனது அரசியல் பயணம் குறித்து, விழா ஒன்றில் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
Samayam Tamil TTV Dinakaran


கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கழகத் தலைவர் டிடிவி தினகரன், எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் அரசியலில் யார் என்று கேள்வி எழுந்தது. அப்போது அவரது மனைவி ஜானகி முன்வந்தார்.

ஆனால் ஆட்சியைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின், ஆட்சியை சசிகலா காப்பாற்றினார். அதனால் தான் இந்த ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா அமைச்சராகத் தான் ஆக்கினார். ஆனால் சசிகலா முதல்வராக ஆக்கினார்.

இருப்பினும் அவரையே கட்சியை விட்டு நீக்கி, நன்றி மறந்தவராக பழனிசாமி செயல்பட்டுள்ளார். டிடிவியால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். எங்கே ஆர்.கே.நகரில் என்னை வெல்ல முடிந்ததா? இதற்கும் இரட்டை இலை சின்னம், ஆட்சி எல்லாம் உங்கள் கையில் தான் இருந்தது.

ஏனெனில் மக்கள் என் பக்கம் இருக்கின்றனர். நான் ஜெயலலிதாவால் எம்.பி ஆக்கப்பட்டவன். நான் நினைத்திருந்தால், 2001ல் முதல்வர் ஆகியிருக்க முடியும். ஆனால் புற வழியில் வர விரும்பவில்லை. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவேன்.

ஆட்சி கட்டிலில் அமர்வேன் அல்லது உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன். பதவிக்காக யார் காலிலும் விழ மாட்டேன். எதைக் கொடுத்தும் மக்களை நான் கூட்டவில்லை. இது தானா சேர்ந்த கூட்டம் என்று டிடிவி தினகரன் கூறினார்.

If I planned, I am the CM of 2001 says TTV Dinakaran.

அடுத்த செய்தி