ஆப்நகரம்

இது மட்டும் நடந்துருந்தா எடப்பாடி தான் இப்போ சி.எம்! - ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி முதல்வராவது சொற்ப வாக்குகளில் கை நழுவி போய்விட்டதாக ஆர்.பி.உதயகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Jul 2021, 7:25 am
பத்தாண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்த அதிமுக எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.
Samayam Tamil edappadi palanisamy


தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் இரட்டை தலைமைகளுக்கிடையே சில உரசல்கள் எழுந்த நிலையில் தற்போது சசிகலா விவகாரம் தலை தூக்கிவருகிறது. இதனால் சசிகலாவுக்கு எதிராக பல்வேறு ஊர்களில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. விளாத்திகுளத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க தயாராகிறதா அரசு?
இந்நிலையில் மதுரை திருமங்கலம் அருகே ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஜெ.பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில் அதிமுகவினர் தேர்தல் சமயத்தில் இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்று கூறினார்.

“சட்ட மன்றத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது. தியாகராய நகர், தென்காசி, காட்பாடி போன்ற தொகுதிகளில் எல்லாம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது.

அந்த 43 தொகுதிகளையும் சேர்த்து 1.98 லட்சம் வாக்குகள் மட்டும் கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றது. அதிமுகவினர் சோர்வடையாமல் உழைத்திருந்தால் இந்த வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பார்” என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டத்திலும் இதே கருத்தைத் தான் உதயகுமார் கூறினார்.
இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழ்நாடு: இதற்கெல்லாம் எப்போது அனுமதி?
மேலும் அமமுகவிலிருந்து வரும் நிர்வாகிகள் தொண்டர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிமுகவில் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி