ஆப்நகரம்

போராட்டம் நடத்தும் இளைஞர்களை கைது செய்தால் தீக்குளிப்போம்.. விவசாயிகள் எச்சரிக்கை

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது கை வைத்தால் தீக்குளிப்போம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

TNN 30 Mar 2017, 3:50 pm
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது கை வைத்தால் தீக்குளிப்போம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil if police arrests students we will set fire on ourselves farmers
போராட்டம் நடத்தும் இளைஞர்களை கைது செய்தால் தீக்குளிப்போம்.. விவசாயிகள் எச்சரிக்கை

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

இதே போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பிற மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, சென்னை, மதுரை, கோவை, திருச்சி என பல இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் போராட விடாமல் கைது செய்தும், களைந்து போக சொல்லியும் போராட்டத்தை களைத்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மீது கைவைத்தாலோ அல்லது கைது செய்தாலோ, நாங்கள் தீ குளிப்போம் என டெல்லியில் போராடும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி