ஆப்நகரம்

எஸ்வி சேகருக்கு ஜெயில் ஆசை இருந்தால் அதை அரசு நிறைவேற்றும் - ஜெயக்குமார்

தேசியக்கொடியை அவமதித்ததாக எஸ்வி சேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்

Samayam Tamil 12 Aug 2020, 2:55 pm
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி பாட திட்டத்தை தமிழக அரசு எதிர்த்ததால், எடப்பாடி பழனிசாமியை எஸ்வி சேகர் கடுமையாக விமர்சித்திருந்தார். அது குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, '' எஸ்வி சேகர் எதையாவது பேசிவிடுவார். வழக்கு வந்தால் மட்டும் ஓடி ஒளிந்துகொள்வார் என கூறினார்.
Samayam Tamil minister jayakumar sv sekar


இந்த கருத்தின் மூலம் எஸ்வி சேகரை அதிமுக ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது வெளிப்பட்டது. இந்நிலையில், யூ டியூப் சேனலில் வெளியான வீடியோவில் எஸ்வி சேகர் தேசிய கோடியை அவமதித்ததாக குற்றசாட்டு எழுந்தது.

இதனால், சென்னையைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் எஸ்வி சேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் விஜகுமாரிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

முதல்வர் வேட்பாளர் யார்? ஜெயக்குமார் சொல்வது இதுதான்!

அப்போது விஜயகுமார், '' எஸ்வி சேகருக்கு சிறை செல்லும் ஆசை இருந்தால் அதை அதிமுக அரசு நிச்சயம் நிறைவேற்றும்'' என கூறினார். அதோடு, முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும். இந்த நேரத்தில் கருத்து தெரிவிப்பது அது பலவீனமாகிவிடும். எம்.ஜி.ஆர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும், மலர வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அடுத்த செய்தி