ஆப்நகரம்

சென்னையிலிருந்து வெளியூர் போறீங்களா? -அப்போ இதுக்கு தயாரா இருங்க!

சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 May 2020, 5:58 pm
தமிழகத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள மாவட்டங்கள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இதையடுத்து, பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
Samayam Tamil travel chennai


* குறிப்பிட்ட ஒரு மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து மற்றும் ரயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.

* மண்டலம் விட்டு மண்டலம் பயணிப்போருக்கு, அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் தள்ளிப்போகும் கோயில்கள் திறப்பு!!

* வெளிமாநிலங்களில் இருந்து ரயில், விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும். இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

*சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.

அரசு பேருந்துகளில் கட்டணம் கூடுகிறதா? போக்குவரத்து துறை விளக்கம்!

கொரோனை தொற்று இல்லையென தெரிய வந்தாலும், அவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.

*அலுவல் ரீதியாக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்வோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி