ஆப்நகரம்

சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு!

சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் தமிழ்நாடு டிஜிபியே பொறுப்பு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Nov 2019, 5:14 pm
சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிலை கடத்தல் வழக்குகளில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்க வேல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
Samayam Tamil சிலை கடத்தல் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு


முதல்வர் பழனிசாமியுடன் லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!!

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழ்நாட்டின் பொக்கிஷங்களை பாதுகாக்கவேண்டும் என்றே உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதில்லை. சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் தமிழ்நாடு டிஜிபியே பொறுப்பு.

ரஜினிகாந்தின் பேச்சு பாஜகவுக்கு எதிரானதா.? என்ன சொல்கிறார் வானதி..

இந்த வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிலை கடத்தல் வழக்குகளில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும், மேலும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறினார். வழக்கு விசாரணைக்கு இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறினார்.

பொன்மாணிக்க வேல் தரப்பு விசாரணைக்கு இரு அமைச்சர்கள் இடையூறு தருவதாக கூறியுள்ளது. அந்த இரு அமைச்சர்கள் யார் என தெரிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறினார். ஆனால் இது குறித்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறினர்.

கொஞ்ச நேரத்தில் மாற்றிப் பேசிய ரஜினி... என்ன நடந்தது இடையில்...

இது தொடர்பாக இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்யக்கோரி வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி