ஆப்நகரம்

ஐஐடி சென்னை வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம்

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மதுக்கடை திறப்பதற்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதையும் கண்டித்தும், சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 15 Apr 2017, 6:46 pm
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மதுக்கடை திறப்பதற்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதையும் கண்டித்தும், சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil iit madras students go on hunger strike in support of protesting tamil nadu farmers
ஐஐடி சென்னை வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம்


தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், தில்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு இன்னல்களை கடந்து, கடந்த 30 நாட்களுக்கும் மேலாக, விவசாயிகளின் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மதுக்கடை திறப்பதற்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதையும் கண்டித்தும், சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐஐடி வளாகத்தில், இன்று காலை தொடங்கிய இந்த போராட்டம், நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
IIT Madras students go on hunger strike in support of protesting Tamil Nadu farmers

அடுத்த செய்தி