ஆப்நகரம்

தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை!

தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TOI Contributor 4 Aug 2016, 3:07 am
தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil illegal sand mining in thamirabarani river
தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை!


மதுரை : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவிற்கு உட்பட்ட கீழ்பிடகை கஸ்பா கிராமத்தின் வார்டு முன்னாள் உறுப்பினர் செல்வநாயகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கே.ஆர். பிரிக் சேம்பரை சேர்ந்த கே.கிருஷ்ணன் எனும் கண்ணனுக்கு குறுமணல் அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்திற்கு மாறாக இயந்திரங்கள் மூலம் 25 அடி ஆழத்திற்கு மணல் அள்ளுவதாகவும், அளவுக்கதிகமாக குவாரிகளுக்கு மணல் எடுத்துச்செல்வதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்பகுதியில் பழமையான இரண்டு கோவில்களும், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியும் அமைந்துள்ளது. அவற்றை பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனும் கூறும் இவர், மணல் திருட்டு குறித்து 2010 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், நிலவியல் மற்றும் சுரங்கங்கள் துறை துணை இயக்குநர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு புகார் அளித்துவருவதாகவும், ஆனால் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுதாரர் குற்றம் சாட்டுகிறார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், நிலவியல் மற்றும் சுரங்கங்கள் துறை துணை இயக்குநர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த செய்தி