ஆப்நகரம்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு: மாறன் சகோதரா்களுக்கு நோட்டீஸ்

சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு வழங்கிய வழக்கில் மாறன் சகோதரா்கள் உள்பட 7 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சி.பி.ஐ. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.

Samayam Tamil 12 Jun 2018, 4:01 pm
சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு வழங்கிய வழக்கில் மாறன் சகோதரா்கள் உள்பட 7 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சி.பி.ஐ. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.
Samayam Tamil Maran brothers


தயாநிதி மாறன் 2004 ஜூன் முதல் 2006 டிசம்பர் வரை மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் அரசுக்கு சொந்தமான தொலைபேசி இணைப்புகளை சட்டத்திற்கு புறம்பாக தனிப்பட்ட விதத்தில் வழங்கியதாக தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரா் கலாநிதி மாறன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மொத்தமாக இந்த வழக்கில் 7 போ் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனா்.

இந்த வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. மாா்ச் 14ம் தேதி நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள புகாா்களை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.

இதனை எதிா்த்து சி.பி.ஐ. அதிகாாிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இதன் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணை முடிவில், தயாநிதி மாறம், கலாநிதிமாறன் உள்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் இது தொடா்பாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் வருகிற 20ம் தேதிக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி