ஆப்நகரம்

தென்மாவட்ட மக்களே! வெளிய எங்கயும் போகாதீங்க; இன்னைக்கு செம மழை உண்டு!

தமிழகத்தில் மிதமானது முதல் கனமானது வரை இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 13 Oct 2017, 6:39 am
சென்னை: தமிழகத்தில் மிதமானது முதல் கனமானது வரை இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil imd says rain possibility in tamilnadu
தென்மாவட்ட மக்களே! வெளிய எங்கயும் போகாதீங்க; இன்னைக்கு செம மழை உண்டு!


கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. வறண்டு போகாத நிலையில், அனைத்து இடங்களில் ஈரம் பார்த்துவிட்டு வானம் மூடிக் கொள்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.

IMD says rain possibility in Tamilnadu.

அடுத்த செய்தி