ஆப்நகரம்

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு ஷாக்; அரையாண்டு தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பு!

அரையாண்டு தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 12 Dec 2020, 12:06 pm
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சில மாணவர்களுக்கு சிரமங்கள் இருக்கும் சூழலிலும் வேறு வழியின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்களிடம் நேரடியாக பாடம் நடத்துவது போல ஆன்லைன் கல்வி இல்லை. எனவே மாணவர்கள் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து கொள்கிறார்கள் என்பதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
Samayam Tamil TN School Online Exam


இதற்கிடையில் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இந்த தேர்வை ரத்து செய்வதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்த மாசமா? தமிழகப் பள்ளிகள் திறப்பு பற்றி அமைச்சர் முக்கியத் தகவல்!

அதேசமயம் பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் ஆலோசனை செய்து முடிவெடுப்பார் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். எந்தவித ஆட்சேபமும் இல்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே பள்ளிக் கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடத் தேவையில்லை.

அரசியலுக்காக 24 ஆண்டு வழக்கத்தை மாற்றிய ரஜினி

மாணவர்கள் நலன் கருதி 50 சதவீத பாடக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்விற்கு வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி