ஆப்நகரம்

மாணவர்களுக்கு குட் நியூஸ்..! அன்பான அறிவிப்பை வெளியிட்ட அன்பில் மகேஷ்...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்குவதை குறித்து அமைச்சர் முக்கிய தகவல்

Samayam Tamil 6 Sep 2021, 2:09 pm
தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு. அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 68 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவிருக்கிறது என்றும் அதற்காக ரூ.10, 200 கோடி செலவாகும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.
Samayam Tamil கோப்புப்படம்


அதன்படி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வந்த நிலையில், பள்ளியில் லேப்டாப் கிடைக்காத 11,12 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த திட்டம் அப்படியே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சில தொழில்நுட்ப கல்லூரிகளில், நிலையங்களில் மட்டும் சலுகை அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தோல் தொழில்நுட்ப கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவச விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் இயங்கி வரும் சிபிடி கல்வி வளாகத்தில் உள்ள தோல் தொழில்நுட்ப பயிலகத்தில் மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்காக சேரும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப், சென்று வர இலவச பஸ்பாஸ் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திமுக அரசு செய்த துரோகம்; முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுப்பது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விகள் பரவலாக எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட அமைச்சர், தமிழகத்தில் படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசு ஆணையில் தெரிவித்தபடி, இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று கூறினார். மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 1172817 லேப்டாப்கள் தரவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி