ஆப்நகரம்

என்னது பாடத்திட்டம் பாதி படிச்சா போதுமா? தமிழக மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2021, 2:45 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நடப்பு கல்வியாண்டு முற்றிலும் புரட்டி போடப்பட்டிருக்கிறது. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக பாடம் கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வகுப்புகள் கால தாமதமாக தொடங்கியதால் முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியாத நிலை உண்டாகியிருக்கிறது. அதிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி மிகவும் அத்தியாவசியமானது.
Samayam Tamil tn school syllabus reduction


இவர்கள் பொதுத்தேர்வு எழுதி மதிப்பெண்களை பெறுவது அவர்களின் எதிர்காலக் கல்விக்கு அடித்தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் நடப்பாண்டு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் குறைப்பு பற்றி சிந்திக்க நேரிட்டது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடர் ஆலோசனை நடத்தி வந்தது.

மீண்டும் பொங்கல் பரிசு ரூ.2,500; தமிழக மக்கள் ரெடியா? மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த சூழலில் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் வரும் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி மகளிர் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி 'தலைவி' படத்தின் புதிய ஸ்டில் வெளியீடு!
பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா அச்சத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் மனநல ஆலோசனை வழங்கப்படும். பாடத்திட்டம் குறைப்பு குறித்து விரைவில் அரசாணை வெளியாகும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி