ஆப்நகரம்

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை!

இன்று மாலை முதல் வெளிநாட்டு மணல் விற்பனை தொடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 21 Sep 2018, 2:57 pm
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்று மாலை 4 மணி முதல் விற்பனைக்கான முன் பதிவு தொடங்கப்பட உள்ளது.
Samayam Tamil Foreign Sand


இந்த மணலை TNsand இணையதளத்திலும், கைபேசி செயலி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முதல்கட்டமான துறைமுகத்தில் 11,000 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட உள்ளது. எனவே முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தற்போது முன்பதிவு செய்து விட்டால், அடுத்த வாரம் முதல் மணல் வழங்கப்படும். TNsandல் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும். ஏற்கனவே மணல் விலை குறித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு யூனிட்(சுமார் 4.5 MT) மணல் ரூ.9,990 ஆகும்.

துறைமுகத்தில் விற்கப்படும் மணல் விலை:

2 யூனிட் - ரூ.19,980

3 யூனிட் - ரூ.29,970

4 யூனிட் - ரூ.39,960

5 யூனிட் - ரூ.49,950

Imported foreign sand will sale from today evening from Tuticorin Harbour says TN Govt.

அடுத்த செய்தி