ஆப்நகரம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 2000 பக்தர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல் புகழ் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

Samayam Tamil 15 Feb 2019, 5:57 pm
திண்டுக்கல் புகழ் பெற்ற கோட்டை மாரியம்மன்கோயில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
Samayam Tamil dindigul


திண்டுக்கல் மாவட்டத்தில்புகழ் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா 05.02.19 செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவானது 15 தினங்கள் கொண்டாடப்படும். இந்த விழாவில் திண்டுக்கல்மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தினசரி ஒவ்வொரு மண்டகப்படி நடந்து வந்தது.

திருவிழாவின் 11ம் நாள் ஆன இன்று திண்டுக்கல் மற்றும் அதனையுள்ள சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியது என்றும் தங்களின் வேண்டுதல் நிறைவேற்றிட வேண்டும் என்றும் கோட்டை மாரியம்மனுக்கு விரதம் இருந்து இன்று 11ம் திருவிழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும் தங்களின் குழந்தைகளை தூக்கி கொண்டும் பூக்குழி இறங்கினர்.

இந்த நிகழ்ச்சி அதி காலை 5.30 மணிக்கு ஆரம்பித்து 5 மணி நேரத்திற்க்கு மேலாக பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

அடுத்த செய்தி