ஆப்நகரம்

கொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புனித பதுவை அந்தோணியார் கோயில் திருவிழா!

கொடைக்கானலில் புனித பதுவை அந்தோணியார் கோயில் திருவிழா சப்பர பவனியுடன் கோலாகலமாக நடந்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2019, 2:20 pm
கொடைக்கானலில் புனித பதுவை அந்தோணியார் கோயில் திருவிழா சப்பர பவனியுடன் கோலாகலமாக நடந்துள்ளது.
Samayam Tamil kodai


கொடைக்கானல் புனித பதுவை அந்தோணியார் கோவில் திருவிழா 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவின் தொடக்கமாக கடந்த 5ஆம் தேதி மாலை கொடியேற்று விழா நடந்தது. கொடைக்கானல் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து புனித பதுவை அந்தோணியார் திருவுருவம் பொறித்த கொடி பவனியாக எடுத்து வரப்பட்டது. இதனை தொடர்ந்து நவநாள் திருப்பலி பூசைகளும் தேர்பவனியும், பகலில் சப்பரபவனியும் நடைபெற்றது.

இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ பக்தர்கள் கலந்துகொண்டு புனித பதுவை அந்தோணியார்,புனித செபஸ்தியார், மைக்கேல் அதிதூதர், புனித மரியாள் ஆகியநான்கு சப்பரங்களை நகரின் முக்கிய வீதி முழுவதும் சுமந்து சென்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக திவ்ய நற்கருணை ஆராதணையும் அதன் பின் அனைத்து பக்தர்களுக்கும் திருவிழாகுழுவினரின் சார்பாக சமபந்தி விருந்தும் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி