ஆப்நகரம்

அமைச்சரின் உதவியாளர் என கூறி குடியிருந்த வீட்டை அபகரிக்க முயற்சி!

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி வீட்டை அபகரிக்க முயன்றவரிடம் இருந்து, தங்களை காப்பாற்றுமாறு பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

Samayam Tamil 5 Mar 2019, 5:45 pm
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி வீட்டை அபகரிக்க முயன்றவரிடம் இருந்து, தங்களை காப்பாற்றுமாறு பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
Samayam Tamil அமைச்சரின் உதவியாளர் என கூறி குடியிருந்த வீட்டை அபகரிக்க முயற்சி!
அமைச்சரின் உதவியாளர் என கூறி குடியிருந்த வீட்டை அபகரிக்க முயற்சி!

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பால் நாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா. இவர் அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அமைச்சர் வீரமணியின் உதவியாளர் ரமேஷ் என்று பொய்யாக கூறி, அடியாட்களை கொண்டு மிரட்டி அந்த இடத்தை அபகரிக்க தொடர்ந்து முயற்சிகள் வருகிறது. மேலும் தாக்குதல் முயற்சியும் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து இந்திரா, ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று தனது மகன் மற்றும் மகளுடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த இந்திரா, அடியாட்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல் கண்காணிப்பாளரிடன் மனு அளித்தார்.

அமைச்சரின் உதவியாளர் என கூறி, குடியிருந்த வீட்டை அபகரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி