ஆப்நகரம்

தமிழகத்தில் மழை பெய்யும்:வானிலை மையம்!

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TNN 8 Jul 2017, 9:05 pm
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil in next 24 hrs may get rainfall in tamilnadu says meteorological director
தமிழகத்தில் மழை பெய்யும்:வானிலை மையம்!


கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் மட்டும் இதுவரை 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவின் கடற்கரைப் பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பிற்பகல் நேரத்தில் கன மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி