ஆப்நகரம்

கட்சி தலைமைக்கு சசிகலா தகுதியற்றவர் - சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பிலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

TNN 20 Mar 2017, 5:44 pm
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பிலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil inadequate leadership for sasiala to admk
கட்சி தலைமைக்கு சசிகலா தகுதியற்றவர் - சட்டப்பஞ்சாயத்து இயக்கம்


இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சமர்ப்பித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: அரசியல் கிரிமினல் மயமாவதை தடுக்க உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளதை தாங்கள் அறிவீர்கள். குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடைவிக்கப்பட்டது இந்த நோக்கத்தில்தான். இவர்களை தேர்தல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க விடக்கூடாது என்ற அர்த்தமும் இதில் அடக்கம்.

ஆனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, எம்பி, எம்.எல்.ஏக்களை நிர்வகிக்கும் கட்சிப் பதவியிலும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கான படிவங்களில் கையெழுத்து போடும் அதிகாரத்துடன் தொடர்ந்து நீடிப்பது சரியா? எனவே, அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதவி வகிக்க தகுதியற்றவரான அவரை தகுதி நீக்கம் செய்து, இதுபோல நாடு முழுவதும் அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கும் கிரிமினல் குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இதற்கு முன்பு, இதே கோரிக்கைக்காக கடந்த 28.12.2016 தேதியன்றும் தங்களிடம் மனு கொடுத்திருப்பதை நினைவுகூர்கிறோம் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி