ஆப்நகரம்

Tamil Nadu Weather : சென்னைக்கு மிதமான மழை உண்டாம்: வானிலை ஆய்வு மையம்!!

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் அவ்வப்போது சில இடங்களில் வெப்ப சலனத்தால் மிதமான மழை பெய்து வருக்கிறது. இந்த மழை இன்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Jun 2019, 9:52 am
தென் மேற்கு பருவ மழை இன்னும் அண்டை மாநிலங்களில் தீவிரமாக துவங்காத நிலையில் தமிழகத்தில் வெப்பப் சலனத்தின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையின் பல இடங்களில் மிதமான மழை பெய்து வெப்பத்தை தணித்துள்ளது.
Samayam Tamil Chennai rain n


கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இன்னும் தீவிர மழை துவங்கவில்லை. விரைவில் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறி தீவிரம் அடைந்து வருகிறது. தென்மேற்கு பருவ மழையால் பயன் அடையும் தென்மேற்கு மழையை ஒட்டிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பருவ மழை பெய்து வருகிறது.

இத்துடன் வெப்ப சலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை , சென்னை, வேலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், காரைக்கால் ஆகிய இடங்களில் இன்று லேசானது முதல், மிதமான மழை பெய்யும். இத்துடன், வரும் 30-ம் தேதி வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி