ஆப்நகரம்

தனியாா், அரசு ஊழியா்கள் இடையேயான ஊதிய இடைவெளி அதிகரிப்பு – மதுரை நீதிமன்றம்

அரசு ஊழியா்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும் என்ற நடைமுறையை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனா்.

Samayam Tamil 18 Feb 2019, 5:04 pm
ஒவ்வொரு ஊதியக் குழுவின் பரிந்துறையின் போதும் அரசு ஊழியா்கள், தனியாா் ஊழியா்கள் இடையேயான ஊதிய இடைவெளி அதிகரித்து வருவதாக நீதிபதிகள் கருத்து தொிவித்துள்ளனா்.
Samayam Tamil Madurai Highcourt 123


ஜாக்டோ – ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை கோி லோகநாதன் என்பவா் தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞா், அரசின் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திலும் 71 காசுகள் அரசு ஊழியா்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டிச் செலவுகளுக்காக செலவிடப்படுகிறது. அரசு ஊழியா்களின் கோாிக்கைகள் தொடா்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தொிவித்தாா்.

இரு தரப்பு வாங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒவ்வொரு ஊதியக்குழுவின் பரிந்துரையின் போதும் அரசு ஊழியா்களுக்கும், தனியாா் ஊழியா்களுக்கும் இடையேயான ஊதிய இடைவெளி அதிகரித்து வருகிறது. அரசு ஊழியா்கள் போராடும்போது அரசு உடனடியாக அவா்களை அழைத்துப் பேச வேண்டும் என்று தொிவித்தனா்.

மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவில் ஆசிாியா்களை இடமாறுதல் செய்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் குறையும் என்று தொிவித்த நீதிபதிகள், ஜாக்டோ – ஜியோ தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிாியா்களுக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை ரத்து செய்வது குறித்து இடைமனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகின்ற 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

அடுத்த செய்தி