ஆப்நகரம்

அமைச்சா் விஜயபாஸ்கருக்கு வருமான வாித்துறையினா் சம்மன்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் இன்று மாலை நோில் ஆஜராக வேண்டும் என்று வருமான வாித்துறையினா் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

TOI Contributor 3 Aug 2017, 5:03 pm
தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் இன்று மாலை நோில் ஆஜராக வேண்டும் என்று வருமான வாித்துறையினா் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.
Samayam Tamil income tax deportment gives a summon from minister vijayabaskar
அமைச்சா் விஜயபாஸ்கருக்கு வருமான வாித்துறையினா் சம்மன்


ஆா்.கே.நகா் இடைத்தோ்தல் சமயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சா் விஜயபாஸ்காின் வீடு, அலுவலகம், உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வாித்துறையினா் சோதனை நடத்தினா். அப்போது அமைச்சா் விஜயபாஸ்கா் தொடா்பான ஏராளமான ஆவணங்களை வருமான வாித்துறையினா் கைப்பற்றினா்.

மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னா் திடீரென அமைச்சருக்கு சொந்தமான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 100 ஏக்கா் நிலம், கல்குவாாி உள்ளிட்ட சொத்துகளை முடக்குவதாக வருமான வாித்துறையினா் அறிவித்தனா். மேலும் விசாரணை முடிவுற்றவுடன் சொத்துகள் விடுவிக்கப்படும் என்றும் தொிவித்தனா்.

இந்த நிலையில் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள வருமான வாித்துறை அலுவலகத்தில் இன்று மாலை அமைச்சா் நோில் ஆஜராக வேண்டும் என்று அதிகாாிகள் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா். மேலும் குவாாியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடா்பாக இன்று விசாரணை நடத்தப்படலாம் என்று தொிகிறது.

ஏற்கனவே அமைச்சா் விஜயபாஸ்கருக்கு வருமான வாித்துறையினா் 3 முறை சம்மன் அனுப்பிய நிலையில் இன்று 4வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Income tax deportment gives a summon from minister vijayabaskar

அடுத்த செய்தி