ஆப்நகரம்

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களை வருமான வரித்துறை கண்காணிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏக்களை வருமான வரித்துறையினர் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

TNN 10 Feb 2017, 1:29 pm
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏக்களை வருமான வரித்துறையினர் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.
Samayam Tamil income tax monitoring sasikalas support mla
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களை வருமான வரித்துறை கண்காணிப்பு


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து, பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் செய்ய தொடங்கியுள்ளார். இதனால் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் முதல்வர் பன்னீசெல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவின் 5 எம்.எல்.ஏக்களும் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமியும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

இந்நிலையில் எம்.எல்.ஏக்களை ஹோட்டலில் தங்க வைத்துள்ள சசிகலா அவர்களுக்கு கோடிக்கணக்கில் ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக வருமான வரித்துறையினர் சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏக்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

income tax monitoring sasikala’s support mla

அடுத்த செய்தி