ஆப்நகரம்

கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது

Samayam Tamil 21 Oct 2019, 7:40 pm
சென்னை: கல்கி சாமியார், அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.
Samayam Tamil kalki bhagavan


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கல்கி சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆந்திரா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, தெலங்கானா என நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் கல்கி ஆசிரமத்துக்கு உள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவரது ஆசிரமத்துக்கு சொந்தமாக உள்ளன.

கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை!!

இவரது மகன் சொந்தமாக தொழில்நுட்ப நிறுவனங்களையும், கர்நாடக மாநிலம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கட்டுமான தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இதனிடையே, கல்கி ஆசிரமம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், பணப் பரிமாற்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

அடேயப்பா.. கல்கி சாமியார் பதுக்கிய 500 கோடி: எவ்வளவு ரொக்கம், நகை, டாலர்கள்!

அதன் அடிப்படையில், கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, கல்கி சாமியார், அவரது மனைவி ஆகியோர் மாயமாகி விட்டதாகவும், வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம், தங்க நகைகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

500 கோடியை வளைத்த கல்கி சாமியார் ‘எஸ்கேப்’: திகைக்கும் அதிகாரிகள்!

இந்த நிலையில், கல்கி சாமியார், அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையின் முடிவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வருவாய் ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும், வட்டி வருவாயாக வந்த ரூ.90 கோடி மறைத்ததும், துபாய், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதும், முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், கல்கி சாமியார் தொடர்புடைய இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி