ஆப்நகரம்

மதுபான ஆலையில் ஐடி ரெய்டு! கணக்கில் வராத 1,120 கோடி ரூபாய் ஆவணம் சிக்கியது!!

சென்னையில் தனியாருக்குச் சொந்தமான மதுபான ஆலையில், 1,120 கோடி ரூபாய் கருப்புப்பணம் பதுக்கியது, வருமானவரித்துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 13 Aug 2019, 3:38 pm
அண்மையில் தனியார் மதுபான ஆலையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1,120 ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil liquor shop


காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு SNJ என்ற தனியார் மதுபான உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2008ம் ஆண்டு முதல் தமிழக அரசின் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. மதுபானம் மட்டுமின்றி சினிமா, லாட்டரி உள்ளிட்ட தொழில்களையும் நடத்தி வருகிறது. இந்த ஆலையின் உரிமையாளர் என். ஜெயமோகன் திரைப்படத் தயாரிப்பாளராகவும் உள்ளார்.

ப. சிதம்பரத்தால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை- முதல்வர் பழனிசாமி

இந்த நிலையில், வருமானவரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை, பெங்களூரு, புதுவை என எஸ்.என்.ஜே மதுபான ஆலைக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத 1,120 கோடி ரூபாய் வருமானம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், ஆலையில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மறைத்து வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

(100 அடியை தாண்டிய மேட்டூர் அணை)

இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மதுபான தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்கியதில், தவறான கணக்கை காண்பித்து, கருப்பு பணத்தை பதுக்கி வைத்தது தெரியவந்தது. மேலும் மதுபான நிறுவனங்களுக்குச் சொந்தமான வங்கி கணக்குகளையும் முடக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கும் மதுபானம் சப்ளை செய்யப்பட்டுள்ளதால், வேறு எந்த மாதிரி மோசடிகள் நடைபெற்றது என்பது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி