ஆப்நகரம்

2 நாட்களுக்கு வெளியே வராதீங்க! - அச்சுறுத்தும் ரெட் அலர்ட்!

தமிழகத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது

Samayam Tamil 9 Nov 2021, 6:37 pm
தமிழகத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil chennai-rains


தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் காரணமாக, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை குறிக்கும் வகையில், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் ரூ.2,000 - மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்?
மேலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பொது மக்கள் அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

இதற்கிடையே, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனை நடத்தினார். அப்போது, பொது மக்கள் யாரும் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

அடுத்த செய்தி