ஆப்நகரம்

Swine Flu Death: பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் 6வது இடம்!

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும்.

Samayam Tamil 10 Dec 2018, 10:04 am
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது.
Samayam Tamil பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் 6வது இடம்!
பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் 6வது இடம்!


மத்திய சுகாதாரத் துறை தரவுகளின்படி, இந்தாண்டு மட்டும் பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு நாடு முழுவதும் 971 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 422 பேர் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7,500-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பலியானதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும். தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 11 மாதங்களில் 2,463 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறுகையில்,

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால், 99 சதவீதம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உடல் நலம் மிகவும் குன்றியிருக்கும் ஒரு சிலரே நோயின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் உயிரிழக்கின்றனர். பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகக் குறைவு. மாநிலம் முழுவதும் தற்போது பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி