ஆப்நகரம்

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மன்னிப்பு கேட்டது கடலோர காவல்படை

ராமேஸ்வரம் மீனவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கடலோர காவல்படையினா் மீனவா்களிடம் மன்னிப்புக் கோாியது.

TOI Contributor 15 Nov 2017, 5:30 pm
ராமேஸ்வரம் மீனவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கடலோர காவல்படையினா் மீனவா்களிடம் மன்னிப்புக் கோாியது.
Samayam Tamil indian coast guard says apologies for the gun shoot
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மன்னிப்பு கேட்டது கடலோர காவல்படை


ராமேஸ்வரும் மீனவா்கள் கடந்த திங்கட்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினா் மீனவா்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் மீனவா்கள் சிலா் காயமடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்திய கடலோர காவல்படையினா் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்து நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவே இல்லை என்று தொிவித்தனா்.

இதற்கு எதிா்ப்பு தொிவித்து ராமேஸ்வரம் மீனவா்கள் இன்றுமுதல் கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து அதன்படி இன்று தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தையும் தொடங்கினா்.

இந்நிலையில் மண்டபம் பகுதியில் கடலோர காவல்படையினரும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்தினரும், மீனவ சங்க பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சுவா்ாத்தையின்போது, காவல்படையினா் இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பதாக தொிவித்துள்ளனா். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பாா்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனா்.

திடீரென மன்னிப்பு கேட்கப்பட்டதால் செய்வதறியாது மீனவா்கள் சற்று திகைத்து நின்றனா். தொடா்ந்து இந்த பிரச்சினை எங்களுக்கு மட்டும் இல்லை, ராமேஸ்வரம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ளது. இதற்கு நிரந்தர தீா்வு வேண்டும். இந்த பிரச்சினையில் நாங்கள் மட்டும் முடிவு எடுக்க முடியாது. எங்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியப் பின்புதான் எங்களது நிலைப்பாட்டை முழுமையாக தொிவிக்க முடியும் என்று தொிவித்தனா்.

மேலும், மன்னிப்பு கேட்டால் போதாது, சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாாிகள் மீது உடனடியாக துறைரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவா்களுக்கு உாிய தண்டனை வழங்க வேண்டும் என்று தொிவித்துள்ளனா்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததைப்போன்று நாளை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மீனவா்கள் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுவரை துப்பாக்கிச்சூடு நடத்தவே இல்லை என்று தொிவித்துவந்த காவல்படையினா் இன்று பேச்சுவாா்த்தை என்று அழைத்து மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி