ஆப்நகரம்

அரிய பூச்சி வகைகள் கொண்ட நாட்டின் முதல் பூச்சி அருங்காட்சியகம் நம்ம தமிழகத்தில்!

முதல் பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

Samayam Tamil 27 Mar 2018, 1:34 am
கோவை: முதல் பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.
Samayam Tamil Insects Museum
பூச்சிகள் அருங்காட்சியகம்


கடந்த 2014ஆம் ஆண்டு, கோவையில் பூச்சி அருங்காட்சியகம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

சுமார் 6,691 சதுர அடி பரப்பளவில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சிகள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இதுதொடர்பான விழாவில் பேசிய வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, உலகின் அரிதான பூச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இங்கு அனைத்து வகை பூச்சிகளும் காணப்படுகின்றன என்றார். பின்னர் பேசிய வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, பூச்சிகள் மூலம் 15 முதல் 20% வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இங்கு வந்தால் பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்றார்.

India's first insect museum opened in Coimbatore.

அடுத்த செய்தி