ஆப்நகரம்

395 மரணங்கள், 49 தற்கொலைகள்- தமிழக சிறைச்சாலைகளின் உறையவைக்கும் பின்னணி..!!

தமிழக சிறைச்சாலைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Nov 2018, 3:43 pm
தமிழகத்தில் உள்ள சிறைகளில் மிருகங்களை விட மோசமான நிலையில் கைதிகள் வாழ்ந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற ஆலோசனைக் குழு அறிக்கை சமர்ப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil slinet-suffers
தமிழக சிறைகளில் வாடும் கைதிகள்- ஆய்வில் அதிர்ச்சி


நீதிபதி எஸ். மணிக்குமார் தலைமையில் தமிழக சிறைகளில் வாழும் கைதிகளில் நிலையை குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதற்காக கடந்த அக்டோபர் 15 முதல் 27ம் தேதி வரை தமிழகத்தின் வேலூர், திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட சிறைச்சாலைகளில் ஆய்வு நடத்தப்பட்டன.

இதுதொடர்பான அறிக்கை தற்போது உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், சிறைகளில் உள்ள பல கைதிகள் சுகாதார சீர்கேட்டில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கான கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 7 ஆண்டுகளில் 469 பேர் சிறையில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 395 பேர் உடல்நலன் பாதிக்கப்பட்டும், 49 பேர் தற்கொலை செய்தி கொண்டும் இறந்துள்ளதாக ஆறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது. மீதமுள்ளவர்கள், சிறைக்குள் அவ்வப்போது நடக்கும் மோதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ’டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு’ கிடைத்த தகவலின் படி, சிறையில் இருக்கும் கைதிகள் மிருகங்களை விட கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும். பெரும்பாலான கைதிகள் வறுமை கோட்டுக்கு கீழேயான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தொடர்ந்து தங்களது வழக்கை நடத்த முடியாத சிக்கலுக்கு ஆளாவதாகவும், அதனால் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் பேசும் போது, முதிய வயது சிறைக் கைதிகளில் நிலை மிகவும் கொடுமையானது. 90 வயதுக்கு மேற்பட்ட பல கைதிகள் சிறையில் இருப்பதாகவும், 75 வயதுக்கு மேலான பலருக்கு பார்வை கோளாறுகளால் அவதிப்படுவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசு இந்த பிரச்னையை கண்டுக்கொள்ளவதில்லை என்று தெரிவித்தனர். ஆனால் சிறைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், கைதிகள் இந்த நிலைக்கு ஆளாக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி