ஆப்நகரம்

கொரோனாவுக்கு சித்த மருத்துவப் பொடி: மத்திய அரசு ரியாக்‌ஷன் என்ன?

சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இம்ப்ரோ மருத்துவ பொடியை கொரோனாவுக்கு பரிசோதித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 7 Jul 2020, 11:30 am
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் உலகமே இந்த பேரிடரில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது.
Samayam Tamil impro medical powder for coronavirus


மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டறியப்படாத நிலையில் சீனாவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தங்கள் பாரம்பரிய மருத்துவத்தை நாடுகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரம் குடிநீரை வழங்குகின்றனர்.

முடக்கத்தான் இலை, வெட்டிவேர் உள்ளிட்ட 66 மூலிகைகள் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இம்ப்ரோ (IMPRO) மருத்துவப் பொடியை உருவாக்கியுள்ளேன். இதை அரசு ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

கொரோனா: பாதிப்பு குறைந்தாலும் குறையாத பலி எண்ணிக்கை!

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசின் உயர் மட்ட குழுவுக்கு இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. தமிழக அரசின் குழு இந்த மருத்துவப் பொடியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக தெரிவித்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மருத்துவப் பொடியை மத்திய அரசு ஆய்வு செய்து ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

கொரோனா நோயாளிகளுக்கு வாக்கி டாக்கி வசதி: அசத்தும் புதுக்கோட்டை போலீஸ்!!

மேலும் இந்தியாவில் இந்திய மருத்துவம் தொடர்பான ஆய்வுகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே இது தொடர்பான ஆய்வுகளுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்க வேண்டும். சித்த மருத்துவப் பொடி குறித்து ஆய்வு செய்து அரசிதழிலும் வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி