ஆப்நகரம்

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கொரோனா பயத்தால் தற்கொலை..!

நெல்லை அருகே பிரசித்தி பெற்ற இருட்டு கடை அல்வா உரிமையாளர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jun 2020, 2:44 pm
நெல்லை நெல்லையப்பர் கோவில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற அல்வா கடை( இருட்டு கடை) 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதி மக்களிடையேயும் இருட்டு கடை அல்வா பிரசித்தி பெற்ற ஒன்றாக இருக்கிறது.
Samayam Tamil இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை


இந்த நிலையில் கடையின் உரிமையாளர் சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அவருக்கும் அவருடைய மருமகனுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் திருநெல்வேலி பெருமாள்புரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரு தினங்கள் முன்பு வரை கடையில் வியாபாரம் செய்த நிலையில் கொரோனா தொற்று தன்னால் பிறருக்கும் பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சாத்தான்குளம்: மேலும் ஒரு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவால் பதற்றம்!

இந்நிலையில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து இன்று காலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக செவிலியர்கள் அவரது தனி அறைக்கு சென்றபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அவரது இல்லம் அமைந்திருக்கும் திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெரு, முழுமைக்கும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டது.

அவருடைய பிரபலமான அல்வா கடையிலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். பிரபல அல்வா கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநெல்வேலி மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களது பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி