ஆப்நகரம்

TN E-Pass: அனைவருக்கும் இ-பாஸ்... உண்மையில் அனைவருக்குமா?

சொந்த/வாடகை வாகனத்தில் செல்வோருக்கு மட்டுமே இந்த இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டது பலனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 17 Aug 2020, 8:05 am
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தண்னீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தமிழ்நாடு இ-பாஸ்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தான் வசிக்கும் பகுதியான இந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இந்தக் கட்டுமானப் பணியின்போது, அங்கிருந்த 8 அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் உள்ள மரப்பலகை மற்றும் தடுப்புகளை அகற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கினார் முருகேசன் என்ற தொழிலாளி. அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.
இவரைக் காப்பாற்ற மற்ற தொழிலாளர்களான சஞ்சய், தவமுருகன் , ஆறுமுகம் , சிரஞ்சீவி ஆகிய 4 பேரும் ஒவ்வொருவராக தொட்டிக்குள் இறங்கினர். அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதில் சிரங்சீவிக்கு 19 வயதுதான் ஆகிறது என்பதும், சஞ்சய்க்கு 22 வயதுதான் என்பதும் கவனிக்கத்தக்கது.

தகவலறிந்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு, தொழிலாளிகள் 5 பேரும் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு முருகேசன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மூவரின் உடல்நிலை குறித்தும் கவலை அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி