ஆப்நகரம்

லீக்காகும் தகவல்: யார் அந்த ஸ்லீப்பர் செல்? கோட்டையில் நடப்பது என்ன?

யார் அவர்கள் என்ற கேள்வி தான் கோட்டை வட்டாரத்தில் அதிகமாக காதில் விழும் சொற்களாக இருக்கிறதாம்.

Samayam Tamil 4 Jun 2022, 3:35 pm
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடியான திட்டங்களை அறிவித்து வருகிறார். மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
Samayam Tamil dmk vs bjp


திமுக அரசை குறிவைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்றும் கூறிவருகிறார். தமிழக அரசு முன்னெடுக்க உள்ள திட்டங்கள் குறித்தும் முன்கூட்டியே பேசிவருகிறார்.

அண்ணாமலைக்கு எவ்வாறு தகவல்கள் உடனடியாக தெரியவருகிறது என கோட்டை வட்டாரத்தில் முதல்வர் தரப்பு கேள்விகளால் துளைத்து வருகிறதாம்.

எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்: என்ன முடிவெடுக்கப் போகிறார்?

இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்தோம். “அரசு அதிகாரிகள், காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றில் திமுகவுக்கு ஆதரவானவர்கள், அதிமுகவுக்கு ஆதரவானவர்கள் என இரு பிரிவினர்கள் இருப்பார்கள். திமுக ஆட்சியிலிருக்கும் போது அதிமுகவுக்கு ஆதரவானவர்கள் மூலம் சில தகவல்கள் அக்கட்சிக்கு செல்லும், அதேபோல் அதிமுக ஆட்சியிலிருக்கும் போது திமுகவுக்கு ஆதரவானவர்கள் சில தகவல்களை இந்த கட்சியினருக்கும் தெரியப்படுத்துவர். இதற்கு முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது. ஆனால் முதன்முறையாக இரு கட்சிகளையும் கடந்து தேசிய கட்சி ஒன்றுக்கு தகவல் செல்வதாக சொல்கிறார்கள்.
அதிகரிக்கும் கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
அதிமுக துடிப்புள்ள எதிர்கட்சியாக செயல்படாத நிலையில் திமுகவுக்கு எதிரானவர்கள் மூலம் சில தகவல்கள் பாஜகவுக்கு பாஸ் செய்யப்படுகின்றன. மேலும் அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அவரது தொடர்புகள் மூலமும் சில தகவல்கள் கசிகின்றதாக சொல்கிறார்கள். பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே ஆளும் தரப்பு ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து பேசிவருகிறது” என்கிறார்கள்.

அடுத்த செய்தி