ஆப்நகரம்

தோண்டி துழாவும் வருமான வரித்துறை: ஜெயலலிதா அறையிலும் அலசல்?

போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறையிலும் வருமான வரித்துறை சோதனையிடப்படலாம் தகவல் வெளியாகியுள்ளது.

TNN 18 Nov 2017, 1:28 am
போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறையிலும் வருமான வரித்துறை சோதனையிடப்படலாம் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil is jayalalithaa room raided by it officials
தோண்டி துழாவும் வருமான வரித்துறை: ஜெயலலிதா அறையிலும் அலசல்?


ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இரவு 10 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் மூன்று அதிகாரிகள் மட்டும் சோதனையிட்டனர். இப்போது 10 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

முதலில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனார் அறையில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். பின்னர் சசிகலாவின் அறையிலும் சோதனை நடத்தியுள்ளனர். அங்கிருந்து பென் டிரைவ், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்யூட்டர் பாகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து ஜெயலலிதாவின் அறையிலும் சோதனையிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவல் அறிந்து சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமன் வேதா இல்லத்திற்குள் சென்றிருக்கிறார். ஆனால், சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினரின் இந்த சோதனை நள்ளிரவில் ஏன் நடைபெறுகிறது என்று கேள்வி எழுப்பியும் பாஜக அரசுக்கும் வருமான வரித்துறைக்கும் கண்டனம் தெரிவித்தும் போயஸ் கார்ட்ன் முன்பு கூடிய தொண்டர்கள் கோஷமிட்டனர். சிலர் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். அவர்கள் தற்காலிகமாக திருமண மண்டபத்தை அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி