ஆப்நகரம்

வீடு மாறும் உதயநிதி: அப்பாவுடன் இருப்பதில் என்ன பிரச்சினை?

திமுக அமைச்சர் உதயநிதி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசினர் இல்லத்தில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 4 Apr 2023, 3:58 pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். இங்கு தான் அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
Samayam Tamil udhayanidhi and stalin


முதலமைச்சரான உடன் அரசு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தங்குவார், அல்லது அது அவரது முகாம் அலுவலகமாக செயல்படும் என கூறப்பட்டது. ஆனால் அவர் தனது இல்லத்தில் ஒரு பகுதியையே முகாம் அலுவலகமாக மாற்றி அங்கேயே முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறார்.

டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவரைப் பார்க்கவும் தினுமும் பலர் சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஐந்து நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
முதல்வரை பார்க்க ஒரு கூட்டம், அமைச்சரை பார்க்க ஒரு கூட்டம் என தினமும் சித்தரஞ்சன் சாலை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் இல்லங்களில் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் குடியேற உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து திமுக வட்டாரங்களில் விசாரிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்காக குறிஞ்சி இல்லம் தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.
காவிரி டெல்டாவில் நிலக்கரி திட்டமா? தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் உதயநிதி உறுதி!
அந்த வீட்டில் குடியிருந்த சபாநாயகர் அப்பாவு மலரகம் வீட்டுக்கு ஜனவரி மாதம் மாறிய நிலையில் குறிஞ்சி வீடு உதயநிதிக்காக தயாராகி வருகிறது. இந்த குறிஞ்சி இல்லத்தில் தான் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது தங்கினார். அதே வீட்டில் தான் தற்போது உதயநிதி வசிக்கப் போகிறார்.

அவரது முகாம் அலுவலகமாகவும் இந்த இல்லம் செயல்படும் என்று கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி