ஆப்நகரம்

ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு? முதல்வர் சொல்லும் ஷாக், அப்புறம் சில சர்ப்ரைஸ்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகிவருகிறது.

Samayam Tamil 10 Jun 2021, 1:25 pm
கொரோனா பொது முடக்கம் ஜூன் 14ஆம் தேதி முடிவுக்கு வர உள்ள நிலையில் அடுத்த கட்ட ஊரங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
Samayam Tamil tn lockdown


ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்ப்படுவதைத் தொடர்ந்து பாதிப்புகள் தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளன. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் சில நாள்களிலேயே 17ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
ஓரங்கட்டப்பட்ட ஸ்டாலினின் வலது கரம்: ஆமா அவரு எங்கே?
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி காலையுடன் முடிவுக்குவரும் நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து இன்று முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு அனுமதியளிக்கப்படலாம், டாஸ்மாக் உட்பட அனைத்துக் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதியளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கில் தளர்வு: முதல்வர் அறிவிக்கப்போவது என்னென்ன?

இந்த தளர்வுகள் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு வழங்கப்படாது என்றும் கூறுகின்றனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி